Uncategorized @ta

வரவு செலவு 2018: வறுமை மற்றும் நடுத்தர மக்களை புறக்கணிக்காதீர் !!!

ஷா ஆலம், அக்டோபர் 23:

மலேசிய பயனீட்டாளர் கூட்டமைப்பு (போஃம்கா) எதிர் வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படும் 2018-இன் மலேசிய வரவு செலவு திட்டத்தில் நடுத்தர வர்க்கம் (எம்40) மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை (பி40) புறக்கணிக்காமல், இந்த வர்க்கத்தினருக்கு பல்வேறு திட்டங்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் பொருளாதார சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை செலவினங்களை குறைக்க முடியும் என்று கூட்டமைப்பின் துணைத் தலைவர் முகமட் யூசோப் அப்துல் ரஹ்மான் கூறினார். மத்திய அரசின் 2018 வரவு செலவு திட்டம் ஒரு ‘தேர்தல் பட்ஜெட்’ எனவும் வாக்காளர்களை கவர பல்வேறு திட்டங்களை தீட்டினாலும் நாட்டின் வளத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் போது திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்றார்.

 

 

 

 

 

 

 

 

மக்கள் உதவி நிதியான பிரீம் வரவு செலவுத் திட்டத்தில் முக்கியமாக எதிர் பார்க்கப்பட்டாலும், மக்களுக்கு தங்களின் வருமானத்தை பெருக்க வியாபார முதலீடு போன்ற திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

”  பிரீம் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். முன்பு ரிம 1,200 மூன்று முறையாக பிரித்துக் கொடுத்தார்கள், போஃம்கா இதை ஒரே தடவையாகவோ அல்லது பற்றுச் சீட்டாகவோ கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இந்த பற்றுச் சீட்டுகளை கடைகளில் அல்லது அமானா சஹாம் சேமிப்பில் மாற்றிக் கொள்ளலாம். பிரீம் புரோட்டோன் ஐரீஸ் வாங்க வைப்புத் தொகையாக பயன் படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முறை உணவு வாகனம் (பூஃட் டிரக்) வாங்குவதற்கு பயன் படுத்தலாம். இதன் மூலம் வருமானத்தை பெருக்க முடியும்,” என்று விவரித்தார்.

#கெஜிஎஸ்


Pengarang :