SELANGOR

கோத்தா டாரூல் எசான் இறையாண்மையின் அடையாளம், முன்னணி மாநிலத்தின் நுழைவாயில்!!!

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 20:

கோத்தா டாரூல் எசான் நுழைவாயில் மலேசியாவின் முன்னணி மாநிலத்தின் நுழையும் இடம் மட்டுமில்லை மாறாக சிலாங்கூர் இறையாண்மையின் அடையாளம் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். 1982-ஆம் நிறுவப்பட்ட இந்த நுழைவாயில் சிலாங்கூர் மாநிலத்தின் சிறப்புகளில் ஒன்று என்று அனைத்து மக்களும் உணர வேண்டும் என்றார்.

”  பெர்லின் நகரில் அமைந்துள்ள  பிரண்டன்பேர்க் கேட் உலகத்தில் பிரசித்திபெற்ற நுழைவாயில் ஆகும். பல மில்லியன் மக்கள் உலகெங்கிலும் இருந்து இந்த அதிசயத்தை காண வருகின்றனர். ஜெர்மனி நாட்டு மக்களின் பெருமையாக கருதுகின்றனர். இதேபோல சிலாங்கூர் மாநில மக்களும் கோத்தா டாரூல் எசான் நுழைவாயிலை நினைத்து பெருமை பட வேண்டும். இதன் நுட்பக்கலை கண்டு ஒவ்வொரு மாநில மக்களும் சிலாங்கூர் மாநில குடிமக்களாக இருப்பது தமது பாக்கியம் என்று பெருமிதம் கொள்ள வேண்டும்,” என்று விவரித்தார்.

 

 

 

 

 

 

மேற்கண்டவாறு அஸ்மின் அலி ஹில்டன் தங்கும் விடுதியில் நடைபெற்ற கோத்தா டாரூல் எசான் நுழைவாயில் மறுசீரமைப்பு திறப்பு விழாவில் அரசு உரைக்கு நன்றி தெரிவிக்கும் போது கூறினார்.

#வீரத் தமிழன்


Pengarang :