SUKANKINI

ஷா ஆலம் அரங்கம் தொடர்பில் அரசியலை நுழைக்க வேண்டாம்!!!

ஷா ஆலம், ஜனவரி 25:

கடந்த இரண்டு ஆண்டுகளில் சூப்பர் லீக் கால்பந்து போட்டி ஆரம்பிக்கும் முன் ஷா ஆலம் அரங்கத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டாம் என்று சம்பந்தப் பட்ட  தரப்பினரை மாநில அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. சிலாங்கூர் மாநில இளையோர் மேம்பாடு, விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாடு ஆட்சிக் குழு உறுப்பினர் அமிரூடின் ஷாரி கூறுகையில், சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் தொடர்பில் முடிவு எடுக்கும் போது மாநில அரசாங்கம் மற்றும் கால்பந்து ரசிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல் படும் என்று தெரிவித்தார்.

”  சிலாங்கூர் மாநில அரசாங்கம் எடுத்த முடிவு அரசியல் நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை மற்றும் வெறும் அவதூறு மட்டுமே. இந்த நடவடிக்கை சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் இயலாமையை மறைக்க நடத்தப்படும் நாடகம் ஆகும். சிலாங்கூர் கால்பந்து சங்கத்தை சேர்ந்த சில பொறுப்பற்ற தரப்பினர் ரசிகர்களுக்கு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். உண்மை தகவல்களை மறைத்து மாநில அரசாங்கத்தின் மீது அவதூறு செய்கிறார்கள்,” என்று விவரித்தார்.

அமிரூடின் மேலும் கூறுகையில், மாநில அரசாங்கம் கால்பந்து விளையாட்டின் மேம்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த 2015-இல் சிலாங்கூர் கால்பந்து அணி 33-வது தடவையாக மலேசிய கிண்ணத்தை வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 


Pengarang :