SELANGOR

சிலாங்கூரை மீண்டும் இருண்டக்காலத்திற்கு கொண்டு செல்லாதீர்

கோம்பாக்,ஏப்ரல் 23:

சிலாங்கூர் மாநில மக்கள் நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் விவேகமாய் வாக்களிக்க வேண்டும்.மீண்டும் அம்னோ தேசிய முன்னணியின் கீழ் சிலாங்கூர் மாநிலத்தை இருண்டக் காலத்திற்கு கொண்டு சென்று விடாதீர்கள் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

மாநில வளங்களையும் மாநில வருமானத்தை மக்களோடு பகிர்ந்துக் கொண்டு ஆக்க்கப்பூர்வமான மாநிலமாகவும் மக்கள் நலன் காக்கும் மாநிலமாகவும் விளங்கிடும் சிலாங்கூர் மாநிலத்தை தொடர்ந்து இன்றைய டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையிலான அரசாங்கம் நிலைத்திருக்க மக்கள் விவேகமாய் செயல்பட வேண்டும் என அவரது சிறப்பு அதிகாரி ஹில்மி இடாம் நினைவுறுத்தினார்.

பொதுத் தேர்தல் காலக்கட்டத்தில் நமக்கு இரு தேர்வுகள் மட்டுமே உள்ளது.ஒன்று இருக்கும் அரசாங்கத்தை நிலைபெற செய்வது அல்லது மக்கள் நலன் இல்லாத,மக்களுக்கான சமூக உதவிகள் இல்லாத முந்தைய இருண்டக்காலத்தை மீண்டும் தேர்வு செய்வது என சுட்டிக்காண்பித்த அவர் மக்களுக்கான பரிவு மிக்க அரசாங்கமாய் நடப்பு சிலாங்கூர் அரசு செயல்பட்டதை சிலாங்கூர் வாழ் மக்கள் எளிதில் மறக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார்.

நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு ஒரே சிந்தனையில் கரம்கோர்த்தால் மீண்டும் சிலாங்கூர் மாநிலத்தை நம் வசம் வைத்துக் கொள்வதோடு புதிய சமூகத்தையும் புதிய தலைமுறையையும் நம்பிக்கையோடு எழுப்பிட முடியும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் மக்களுக்கான ஒவ்வொரு உதவிகளும் திட்டங்களும் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்.அஃது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவுவதோடு மாநில அரசின் திறனையும் ஆளுமை செய்கிறது எனவும் பத்துகேவ் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கூறினார்.

இன்றைய சூழலில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் திறனும் நிர்வாக செயல்பாடும் நிறைவு அளிக்கும் வகையோடு மட்டுமின்றி முன்மாதிரியாகவும் விளங்குகிறது.மக்களும் இம்மாநிலத்தில் சிறப்பாகவே வாழ்கிறார்கள்.இந்நிலையில் இருக்கும் மாநில அரசாங்கத்தை மாற்ற வேண்டுமா?என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.

மேலும்,அரசியல் என்பது தேர்தல் காலத்தின் போட்டியல்ல.மாறாய்,சிறந்த நிர்வாகம் மற்றும் செயல்பாட்டின் உன்னதம் என சிலாங்கூர் மாநில சுல்தான் கூறியதையும் நினைவுக்கூர்ந்த அவர் மக்கள் நலன் காக்கும் மாநிலமாகவும் மக்கள் வாழ்வாதாரத்தை செழிமைபடுத்த ஆக்கப்பூர்வமாகவும் இயங்கி வரும் நடப்பு சிலாங்கூர் மாநில அரசாங்கம் நிலைத்திருக்க மக்கள் வழி செய்வார்கள் எனும் நம்பிக்கை தொடர்ந்து உயிர்ப்பிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.


Pengarang :