NATIONAL

ஏமாற்றுகளை தவிர்க்க தேர்தல் பிரதிநிதியாய் பதிந்துக்கொள்ளவும்!!

ஷா அலாம்,ஏப்23:

நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் ஏமாற்றுகளையும் தில்லுமுல்லுகளை தவிர்ப்பதற்கும் தன்னார்வலர் சிந்தனையோடு அதிகமானோர் “பாச்சா” எனப்படும் வாக்காளர் சரிபார்த்தல் மற்றும் வாக்குகள் எண்ணும் பிரதிநிதியாக விரைந்து பதிவு செய்துக் கொள்ளுமாறும் முன்னாள் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரசீட் ரஹ்மான் கேட்டுக் கொண்டார்.

அதிகமானோர் இதன் கீழ் பதிந்துக் கொள்வதால் தேர்தல் நாளன்று தேர்தல் அறையில் உண்மைகாக இவர்களால் குரல் கொடுக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கவும் முடியும்.இதன் மூலம் ஏமாற்றுகளை தவிர்க்கவும் முடியும் என்றார்.

வாக்குகள் எண்ணும் போதோ அல்லது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாளர்கள் தவறு செய்யும் போதும் அல்லது அவர்கள் ஒரு தரப்பிற்கு சாதகமாய் செயல்பட்டாலோ அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் உரிமையை “பாச்சா” பிரதிநிதிகள் பெற்றுள்ளனர் என்றும் விவரித்தார்.

மேலும்,தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சகல தவறான செயல்களுக்கும் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படுவதோடு தேர்தல் ஆணையத்தை தேசிய முன்னணி தனது எடுப்பார் கைப்பிள்ளையாக்கும் போக்கையும் முறியடிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒவ்வொரு வாக்குகளும் முறையாக செலுத்தப்படுகிறதா?முறையாக எண்ணப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் உறுதிப்படுத்தவும் “பாச்சா” மட்டுமே சரியான வழிதடம் என்றும் பெர்சத்து கட்சியின் உதவி தலைவருமான அவர் கூறினார்.

ஐயத்திற்குரிய சுமார் 40 தொகுதிகளில் நமக்கு 20,000 தன்னார்வலர்கள் “பாச்சா” விற்கு தேவைப்படும் நிலையில் தற்போது 6,000பேர் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறினார்.தன்னார்வ முறையில் “பாச்சா” வில் இணைய https://buff.my/2ltWxo9 எனும் அகப்பக்கத்தில் பதிவு செய்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :