NATIONAL

துன் மகாதீர்: மலேசியா 2020-இல் அல்ல; மாறாக 2025-இல் மேம்பாடு அடைந்த நாடாக திகழும்

பெய்ஜிங் , ஆகஸ்ட் 20:

மலேசியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்த நாடாக திகழும், இருந்தாலும் அது ஆரம்பத்தில் இருந்து வந்த  காலக்கெடுவான 2020-ஐ விட கூடுதல் காலம் வேண்டும் என்று வலியுறுத்தினார்.

”  2020-க்குள் நாம் அதன் இலக்கை அடைய முடியாது, ஆனாலும், 2025-இல் இது சாத்தியம் ஆகும்,” என்று இரவு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

துன் டாக்டர் மகாதீர், சீனா நாட்டிற்கான ஐந்து நாள் அதிகாரப்பூர்வ வருகையின் போது இதைத் தெரிவித்தார்.

” நாம் இப்போது, முன்புள்ள அரசாங்கத்தினால் சீர்குலைக்கப்பட்ட நாட்டில் இருக்கிறோம்,” என்று தெரிவித்தார். புதிய மலேசிய அரசாங்கம் மீண்டும் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல பாடுபடுவோம் என்று விவரித்தார்.


Pengarang :