ECONOMYNATIONAL

ஜூன் இறுதிவரை மலேசியாவின் கையிருப்பு 102.72 பில்லியன் டாலர்

கோலாலம்பூர், ஜூலை 31-

இவ்வாண்டு அதிகாரப்பூர்வ கையிருப்பின் சொத்துடமை 102.72 பில்லியன் டாலர் வெள்ளியாகவும் அந்நிய நாட்டு நாணய சொத்து 58.5லட்சம் டாலராகவும் பதிவு செய்யப்பட்டதன் வழி ஜூன் மாத இறுதி வரை மலேசியா தனது கையிருப்பைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது.

அடுத்த 12 மாதங்களில் அந்நிய நாட்டு நாணய கடனுக்காக அடையாளம் காணப்பட்ட குறுகியகால பரிவர்த்தனை, உத்தரவாத பத்திரம் மற்றும் அரசாங்கத்தால் திரும்பச் செலுத்தப்படும் திட்டமிடப்பட்ட வெளிநாட்டு கடன் மற்றும் வங்கிகளுக்கு இடையே திரும்பச் செலுத்தும் மத்திய வங்கியின் திட்டமிடப்பட்ட வெளிநாட்டு கடன் ஆகியவை குறிப்பிட்ட காலம் எட்டும்போது 5.81 பில்லியன் டாலரை அடையும் என்று மத்திய வங்கி அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டது.

இவ்வாண்டு ஜூன் மாத இறுதி வரைக்குமான குறுகிய கால பரிவர்த்தனை 14.69 பில்லியன் அமெரிக்க டாலராகக் காணப்படுவது அந்நிய செலாவணி ரொக்க பரிவர்த்தனை நிர்வாகம் சிறப்பாக இருப்பதையே பிரதிபலிக்கிறது என்றார்.
2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஏற்றுக் கொள்ளப்பட்ட அமலாக்க நடைமுறையின்படி அடுத்த 12 மாத கால கட்டத்திற்கான அந்நிய செலாவணியாகப் பெறப்படும் வட்டி வருமானம் மற்றும் கடனுதவி திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 2.47 பில்லியன் அமெரிக்க டாலர் பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட தரவில் உள்ளடக்கப்படவில்லை.


Pengarang :