NATIONALRENCANA PILIHAN

அடுத்த மாதம் தொடங்கி நாடு முழுவதும் 5 ஜி சேவை

கோலாலம்பூர், செப்.24-

5 ஜி பரீட்சார்த்த சோதனை நடவடிக்கை கடந்த ஏப்ரல் தொடங்கி புத்ராஜெயா மற்றும் சைபர் ஜெயாவில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. தற்போது இச்சேவை வரும் அக்டோபர் மாதம் தொடங்கி நாடு முழுவதும் விரிவாக்கம் காணும் என்று தொடர்பு மற்றும் பல்லூடக துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

5 ஜி இணையத் தொடர்பு சேவை குறித்து மலேசியாவின் கடப்பாடும் பரீட்சார்த்த சோதனை நடவடிக்கையும் உலகில் 5ஜி பயன்பாட்டை மேற்கொள்ளும் முன்னோடி நாடுகளில் ஒன்றாக மலேசியாவை நிலை நிறுத்தியுள்ளது என்றார் அவர்.
அதேவேளையில், கெந்தியான் ஒப்டிக் திட்டத்திற்கு (என்எஃப்சிபி) அடிப்படையான டிஜிட்டல் வசதிகளை அமைச்சு மேம்படுத்து வருவதாகவும் அவர் சொன்னார்.

21.6 பில்லியன் வெள்ளி செலவில் அடுத்த 5 ஆண்டு கால கட்டத்திற்கு தொடங்கப் பட்டுள்ள என்எஃப்சிபி 20,000 வேலை வாய்ப்புகளைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கோபிந்த சிங் குறிப்பிட்டார்.


Pengarang :