PUTRAJAYA, 2 Dis — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad (dua, kanan) menyampaikan ucapan pada Perhimpunan Bulanan Jabatan Perdana Menteri di Dataran Putra Perdana, Bangunan Perdana Putra hari ini. Turut sama Timbalan Perdana Menteri Datuk Seri Dr Wan Azizah Wan Ismail (kanan). — fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

வறுமையை ஒழிக்கும் அரசாங்கத்தின் வியூகத்தை வரவேற்பீர்!

புத்ராஜெயா, டிச.2-

ஏழ்மையில் வாடுபவர்களின் வருமானத்தை பெருக்கி அதன் வழி அவர்களை ஏழ்மையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே 2030 கூட்டு வளப்பத்தை நோக்கி எனும் அரசாங்கத்தின் வியூகமாகும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.
இந்த தூர நோக்கு திட்டத்தின் மூலம் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது என்றார் அவர்.

மூலதனத்திற்கான நிதியுதவி மற்றும் சம்பந்தப்பட்ட வர்த்தகம் குறித்த பயிற்சி ஆகியவற்றின் மூலம் குறைந்த வருமானம் பெறுவோரின் வருவாயை அதிகரிக்க அரசாங்கம் முயன்று வருகிறது என்றும் அவர் விளக்கமளித்தார்.
“ஏழ்மை நிலையில் வாழ்பவர்கள் அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்று அவர்களின் வறுமையை ஒழிக்க முயல் வேண்டும். அவர்களின் உழைப்பின் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தை அவர்கள் உயர்த்திக் கொள்ள முடியும்” என்றார் அவர்.


Pengarang :