Anggota penguat kuasa menyita tilam yang digunakan pusat urut di Prima Gombak dalam satu operasi, Jumaat lalu. Foto MPS
PBTSELANGOR

உரிமம் இன்றி செயல்பட்ட இரு வீடுகளில் எம்பிஎஸ் சோதனை

செலாயாங், மார்ச் 3-

இங்குள்ள பிரிமா கோம்பாக்கில் உரிமம் இன்றி செயல்பட்ட இரு உடம்பு பிடி வீடுகளில் செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்) கடந்த வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தியது.  பிற்பகல் 3 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் அமலாக்க பிரிவினர் பல்வேறு பொருட்களையும் பறிமுதல் செய்ததாக எம்பிஎஸ் தொழில் கழக பிரிவு இயக்குநர் முகமது ஜின் மாசோட் தெரிவித்தார்.

“அமலாக்க பிரிவினர் 15 மெத்தைகள், 7 தலையணைகள், 6 தைல போத்தல்கள், 5 சோபாக்கள், ஒரு குளுரூட்டி, ஒரு தொலைக்காட்சி பெட்டி மற்றும் இதர பொருட்களையும் பறிமுதல் செய்தனர்” என்றார் அவர். 2007 பிரிவு 3 அழகு மையம் மற்றும் சுகாதார துணை சட்டத்திற்கு ஏற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.


Pengarang :