NATIONALRENCANA PILIHAN

நடமாட்டு கட்டுப்பாடு நடப்பில் இருப்பினும் பிளஸ் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தலாம்!

ஷா ஆலம், மார்ச் 23-

மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கும் நடமாட்ட கட்டுப்பாடு காலத்தில் சாலைப் பயனீட்டாளர்கள் பிளஸ் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தலாம் என்று பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜாலான் டூத்தா டோல் சாவடி, ஆயர் குரோ மற்றும் சுங்கை பீசி ஆகிய சாலைகளில் மட்டுமே சாலை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இந்நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

“பிளஸ் நிறுவனப் பராமரிப்பின் கீழ் உள்ள நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. நேற்றிரவு தொடங்கிய சாலைத் தடுப்பு நடவடிக்கையில் இதர நிறுவங்களுடன் நாங்களும் காவல் துறைக்கு உதவி வருகிறோம்” என்றார் அவர்.
நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாத போதிலும் நெடுஞ்சாலை ரோந்து படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

அரசாங்கம் பிறப்பித்துள்ள ஆனையை சாலைப் பயனீட்டாளர்கள் பின்பற்றுவதை அமலாக்க தரப்பினர் சோதனை நடத்த ஏதுவாக ஒரு வழி சாலை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது என்று அவர் விவரித்தார். இதனிடையே, நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள ஓய்விடங்கள் வழக்கம் போல திறந்துள்ளன. ஆயினும், அங்குள்ள பல உணவகங்கள் திறக்கப்படாமல் உள்ளன.


Pengarang :