Pembantu perubatan memeriksa suhu badan orang awam sebelum mendapatkan rawatan di Klinik Damai, Seksyen 7, Shah Alam pada 27 Mac 2020 sebagai langkah mencegah penularan Covid-19. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

கோவிட்-19 நோயாளிகளுக்கு ரிம. 1 ஆயிரம் சிலாங்கூர் அரசு அறிவிப்பு

ஷா ஆலம், ஏப்.1-

சிகிச்சை பெற்று வரும் கோவிட்-19 தொற்று நோயாளிகளுக்கு தலா 1,000 ரிங்கிட்டை மாநில அரசு வழங்கும். சிலாங்கூர் மாநில 2ஆம் கட்ட பொருளாதார நல திட்டத்தை தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அறிவித்த மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இதனைத் தெரிவித்தார்.  மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மன நல அலோசனை வழங்கும் நிபுணத்துவ சேவைக்கு மாநில அரசு 1 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளாக அவர் அறிவித்தார்.

“நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை மற்றும் கோவி-19 தொற்று காரணமாக பலரின் மன நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு அலோசனைகள் வழங்க மன நில நிபுணத்துவ சேவைக்கு மாநில அரசு ரிம.1 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது” என்றார் அவர்.
முன்னதாக, 127.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதல் கட்ட பொருளாதார நில திட்டத்தை மாநில அரசு கடந்த மார்ச் 20ஆம் தேதி அறிவித்திருந்தது. அதன் 2ஆம் கட்டமாக இன்று 127.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டம் அறிவிக்கப்பட்டது.


Pengarang :