Anggota polis membuat sekatan jalan raya berikutan Perintah Kawalan Pergerakan bagi mengawal wabak Covid-19 di Lebuhraya Cheras – Kajang, Kajang pada 23 Mac 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

பிகேபி: காவல்துறை காஜாங்கில் 8 சாலைகளை முடிய வேளையில் சாலை தடுப்பு சோதனையை அதிகரித்தது !!!

கோலா லம்பூர், ஏப்ரல் 7:

எதிர் வரும் ஏப்ரல் 8 தொடங்கி காஜாங் மாவட்ட காவல்துறை எட்டு முக்கிய சாலைகளையும், மேலும் பல இடங்களில் சாலை தடுப்பு சோதனைகளை செய்ய இருப்பதாக காஜாங் மாவட்ட காவல்துறை ஆணையர் ஏசிபி அமாட் டஃஸாபீர் முகமட் யூசுப் தெரிவித்தார். மூடப்படும் சாலைகளில் காஜாங் நகருக்கு செல்லும் பிரதான சாலையும் அடங்கும். இதன் வழி கோவிட்-19 தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடமாடும் கட்டுபாட்டு ஆணை (பிகேபி) மேலும் கடுமையாக்கப்படும் என்றார்.

” கீழ் வரும் சாலைகள் கடுமையாக்கப்பட்ட பிகேபி நடைமுறைகளின் கீழ் மூடப்படும்:-

1. Jalan Sungai Chua-Susur Terowong KTM

2. Jalan Reko-MRT; Jalan Cheras- Jalan Timur (depan Masjid Jamek Kajang)

3. Jalan Semenyih- Jalan Low Ti Kok

susur turun ke Jalan TTDI Grove 2/1 dari arah Persiaran Saujana Impian

4. Jalan TTDI Grove 1/1

5. Persiaran Saujana Impian-Jalan Melor 1

6. Jalan Sungai Kantan dari arah Desa Jenaris dan dari arah Persiaran Saujana Impian

7. sempadan Bandar Seri Putra- Nilai 3,” என்று தமது அறிக்கையில் அவர் கூறினார்.

இதனிடையே, ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஏழு சாலை தடுப்பு சோதனைகளை தவிர்த்து மேலும் மூன்று அதிகரிக்கப்பட்டுள்ளன என்றார். அதில் பெஸ்ராயா நெடுஞ்சாலை ( கி.மீ 1 யுபிஎம் நோக்கி), ஜாலான் செராஸ் 14-வது மைல் (கேபிஜே முன்புறம்- காஜாங் நோக்கி) மற்றும் சுங்கை ராமால் டாலாம் ( புத்ராஜெயா நோக்கி) ஆகிய இடங்களில் எதிர் வரும் ஏப்ரல் 8 தொடங்கி சாலை தடுப்பு சோதனைகள் நடத்தப்படும் என்று அமாட் டஃஸாபீர் முகமட் யூசுப் தெரிவித்தார். ஆகவே, பொது மக்கள் பிகேபி நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் மீறியவர்களை சட்டம் தன் கடமையை செய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Pengarang :