Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari bersama sukarelawan Team Selangor program edaran Beg Makanan TS Cares Siri-3 di Dewan MPBJ Seksyen 2, Kota Damansara pada 4 Julai 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் உணவு வங்கித் திட்டம் தொடரப்படும்- மந்திரி பெசார்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4:

கோவிட் -19 தொற்று நோய் பரவலால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சிலாங்கூர் உணவு வங்கி திட்டத்தை மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்தி வரும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். கடந்த ஆண்டு முதல் இது திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் நடமாடும் கட்டுப்பாடு ஆணை  (பிகேபி) தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், இப்போது மாநிலம் முழுவதும் மீண்டும் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

” இந்த திட்டம் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு உதவ மாநில அரசின் செயல்பாட்டு முறைகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். மேலும் ஏழைகளுக்கு பயனளிப்பதற்காக அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று டீம் சிலாங்கூர் (திஎஸ்) கேர்ஸ் நிகழ்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

கோத்தா டமன்சாரா சட்டமன்ற  உறுப்பினர் சத்ரி மன்சோர் மற்றும் டிஎஸ் ஒருங்கிணைப்பாளர்  அமாட் பக்ரின் சோபாவி அபு பக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். நவம்பர் 1 ம் தேதி, சிலாங்கூரில் 2,000 நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள் சிலாங்கூர் உணவு வங்கி ரிம 5 மில்லியன் தொடக்க நிதியைத் தொடங்குவதன் மூலம் பயனடைவதாக மந்திரி பெசார் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :