ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

ரவாங்கில் அரசாங்க நிலத்தில் கட்டப்பட்ட தொழிற்சாலை உடைக்கப்பட்டது

ரவாங், டிச 1- அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கனரக வாகன பழுது பார்ப்பு பட்டறை அமலாக்க அதிகாரிகளால் உடைக்கப்பட்டது.

சுங்கை காரிங் அருகே சுமார் 2.2 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டிருந்த அந்த பட்டறையை கோம்பாக் மாவட்ட நில அலுவலகத்தின் உதவியுடன் செலாயாங் நகராண்மைக் கழக அதிகாரிகள் அகற்றினர்.

கடந்த ஒரு வார காலத்தில் இப்பகுதியில் சட்டவிரோத தொழிற்சாலைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது நடவடிக்கை இதுவாகும்.

ரவாங் ஆற்றோரம் செயல்பட்டு வரும் எட்டு தொழிற்சாலைகள் விரைவில் உடைக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 24 ஆம் தேதி கூறியிருந்தார்.

ஆறு கனரக வாகன பழுது பார்ப்பு பட்டறைகள் ற்றும் இரண்டு மறுசுழற்சி தொழிற்சாலைகள் மீது சட்டவிரோதமாக அரசாங்க நிலத்தில் செயல்பட்டது தொடர்பில் தேசிய நிலச் சட்டத்தின் 425வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்


Pengarang :