ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர் மாநில கோவிட்-19 நடவடிக்கை அறை விரைவில் செயல்படத் தொடங்கும்

ஷா ஆலம், ஜன 22- நோய்த் தொற்று பிரச்சினைகளை முறையாக கண்காணிப்பதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில கோவிட்-19 நடவடிக்கை அறை விரைவில் செயல்படுத் தொடங்கும்.

இந்த நடவடிக்கை அறை மாநில அரசு தலைமை செயலகத்தில் உள்ள ஸ்மார்ட் சிலாங்கூர் சி5ஐ நடவடிக்கை மையத்திலிருந்து செயல்படும்

உதவித் திட்டங்களை ஒருமுகப்படுத்துவது, மத்திய அரசு நிறுவனங்களுடன் 
இணைந்து கட்டுப்பாட்டு பணிகளுக்கு உதவுவது மற்றும் மாநிலத்தில் நோய்த் 
தொற்று சம்பவங்களின் எண்ணிக்கையை கண்காணிப்பது ஆகிய பணிகளை 
இந்த நடவடிக்கை அறை மேற்கொள்ளும் என்று எஸ்.எஸ்.டி.யு. எனப்படும் 
ஸ்மார்ட் சிலாங்கூர் விநியோகப் பிரிவு கூறியது.

சுமார் 60 லட்சம் வெள்ளி செலவிலான இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அதிவேக இணைய ஒருங்கமைப்பை கொண்டிருக்கும்.

மேலும், ஓரிட தொடர்பு முறை, தரவு மையம், தரவு ஆய்வு ஆற்றல் வசதிகளைக் கொண்ட புள்ளிவிபரத் தளம் ஆகிய வசதிகளையும் இந்த கட்டுப்பாட்டு மையம் கொண்டிருக்கும்.

உத்தரவு, கட்டுப்பாட்டு, தொடர்பு, கணினி, கூட்டுச் செயல்பாடு, ஒத்துழைப்பு 
ஆகிய ஐந்து அம்சங்களை இந்த நடவடிக்கை அறையின் பணிகள் 
உள்ளடக்கியிருக்கும்.

Pengarang :