ECONOMYPBTSELANGOR

ஹிஜ்ரா கடனுதவித் திட்டத்திற்கான விண்ணப்ப பாரங்களை ஹிஜ்ரா கிளை அலுவலகங்களில் பெறலாம்

ஷா ஆலம், பிப் 23– புதிதாக வியாபாரத்தை தொடக்க விரும்புவோருக்கான ஹிஜ்ரா சிலாங்கூர் கடனுதவித் திட்ட விண்ணப்பபாரங்கள் மாநிலம் முழுவதும் உள்ள ஹிஜ்ரா கிளைகள் வாயிலாக விநியோகம் செய்யப்படுகின்றன.

மைக்ரோகிரடிட், நியாகா டாருள் ஏசான் (நாடி) மற்றும் கோ டிஜிட்டல் கடனுதவித் திட்டங்களுக்கான விண்ணப்பபாரங்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை விநியோகிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

விண்ணப்ப பாரங்களைப் பெற விரும்புவோர் தங்களின் வருகை நேரத்தை முன்கூட்டியே தொலைபேசி வழி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

புதிதாக வியாபாரம் செய்யத் தொடங்குவோர் குறைந்தது ஆயிரம் வெள்ளியை கடனுதவியாக பெறுவதற்கு வகை செய்யும் நாடி திட்டத்திற்கு ஒரு கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி புசார்,  2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அறிவித்திருந்தார்.

ஊராட்சி மன்றங்களிடமிருந்து தற்காலிக லைசென்ஸ் பெற்று வியாபாரம் செய்ய வகை செய்யும் இத்திட்டத்தின் வழி மூவாயிரம் பேர் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப் படுகிறது. தற்போது வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் மூவாயிரம் பேர் தங்களின் வர்த்தக நோக்கத்திற்காக தகவல் தொடர்பு சாதனங்களை வாங்க இந்த கோ டிஜிட்டல் திட்டம் உதவி புரிகிறது.

புதிதாக வர்த்தகத்தை தொடங்குவோருக்கு மைக்ரோகிரடிட் திட்டத்தின் வழி கடனுதவி வழங்கப்படுகிறது.

 


Pengarang :