ECONOMYSELANGOR

மக்களின் அலட்சியப் போக்கினால் கோவிட்-19 நான்காவது அலை உருவாகலாம்- மந்திரி புசார் அச்சம்

கோம்பாக், ஏப் 16– மக்களிடையே காணப்படும் அலட்சியப் போக்கு கோவிட்-19 நோய்த் தொற்றின் நான்காவது அலை உருவாக காரணமாக அமைந்து விடும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அச்சம் தெரிவித்தார்.

நோன்பு மாதம் தொடங்கியது முதல் பொருள்களை வாங்குவதில் மக்கள் காட்டும் ஆரவம் காரணமாக எஸ்.ஒ.பி. விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டு நோய்த் தொற்று அதிகரிப்பதற்குரிய சூழலை ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

ரமலான் சந்தை தொற்று மையம் என புதியதாக ஒன்று உருவாகிவிடுமோ என நான் அஞ்சுகிறேன். நமக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புதிய அலையின் உருவாக்கத்திற்கு நாமே காரணமாகி விட வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.

இங்குள்ள அல்-ஹிஜ்ரா மண்டபத்தில் நடைபெற்ற ஹிஜ்ரா சிலாங்கூரின் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

எஸ்.ஒ.பி. நிபந்தனைகளை மக்கள் பின்பற்றாத பட்சத்தில் ரமலான் சந்தைகளை ரத்து செய்ய அரசாங்கம் தயங்காது என்றும் அவர் சொன்னார்.

 


Pengarang :