NATIONALPENDIDIKANPress Statements

யு.பி.எஸ்.ஆர். தேர்வு முற்றாக அகற்றப்படுகிறது- பி.டி. 3 தேர்வு இவ்வாண்டு ரத்து

ஷா ஆலம், ஏப் 28-  யு.பி.எஸ்.ஆர். எனப்படும் தொடக்கப் பள்ளி மதிப்பீட்டுத் தேர்வு  முற்றாக அகற்றப்படுவதாக முதன்மை கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் கூறினார்.

இந்த தேர்வுக்கு பதிலாக பள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

அதேவேளையில் இவ்வாண்டிற்காக மூன்றாம் படிவ மதிப்பீட்டுத் தேர்வு (பி.டி.3) ரத்து செய்யப்படும் என்றத் தகவலையும் அமைச்சர் வெளியிட்டார்.

யு.பி.எஸ்.ஆர். தேர்வு அகற்றப்படுவதையொட்டி பி.ஏ.எஸ்.ஆர். எனப்படும் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கான தொடக்கப் பள்ளி மாற்று மதிப்பீட்டு தேர்வும் ரத்து செய்யப்படுகிறது என்று இங்கு நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

யு.பி.எஸ்.ஆர். தேர்வு அகற்றப்படுவதன் வழி அடுத்தாண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளிகளை அடிப்படையாக கொண்ட மதிப்பீட்டு முறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். 2022ஆம் ஆண்டு தங்கிப் படிக்கும் பள்ளிகளுக்கு செல்வோர் விஷேச பள்ளி நுழைவு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றார் அவர்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை உள்ளடக்கிய 1,700 பேரிடம் பல கட்ட விவாதங்களையும் கருத்துக் கணிப்பையும் மேற்கொண்டப் பின்னரே யு.பி.எஸ்.ஆர். தேர்வை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.

 


Pengarang :