ECONOMYPBTSELANGOR

உணவு விநியோகம் செய்வோருக்கு பாதுகாப்பு அங்கி -எம்.பி.எஸ்.ஏ. வழங்கியது

ஷா ஆலம், மே 6– மோட்டார் சைக்கிள்களில உணவு விநியோகப் பணியை மேற்கொண்டு வரும் 300 பேருக்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் பாதுகாப்பு அங்கிகளை வழங்கியது.

நோன்பு பெருநாளை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டதாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் இடைக்கால டத்தோ பண்டார் முகமது ரஷிடி ருஸ்லான் கூறினார்.

மோட்டார் சைக்கிள்களின் உணவு பட்டுவாடா செய்வோரின் பாதுகாப்பை மையமாக கொண்டு இந்த பாதுகாப்பு இயக்கம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

இப்பணியில் ஈடுபட்டவர்கள் சாலைகளில் ஆபத்தை எதிர்நோக்கும் சாத்தியம் அதிகம் உள்ளது. ஆகவே, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு அங்கிகளை வழங்க மாநகர் மன்றம் முன்வந்துள்ளது என்றார் அவர்.

கடந்தாண்டு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட காலக்கட்டத்தில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் 2,576 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 1,700 பேர் உணவு மற்றும் பொருள் பட்டுவாடார செய்யும் பணியில் ஈடுபட்டவர்களாவர்.


Pengarang :