NATIONAL

இந்திய சமூக கல்வியில் அரசு கவனம் செலுத்தும்!!

ஷா ஆலம்,ஜூலை22:

நாட்டின் 14வது பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போல் அரசாங்கம் இந்திய சமூகத்தின் கல்வி விவகாரத்தில் தனி கவனம் செலுத்தும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் குறிப்பிட்டார்.

சிறந்த கல்வி,சிறந்த வசதிகள்,தரமான கல்வி ஆகியவையும் அதில் அடங்கும் என கூறிய குலசேகரன் இந்திய சமூகத்திற்கு நிறைவான கல்வியை வழங்குவதிலிருந்து அரசு ஒருபோதும் பின்வாங்காது என்றார்.

அதேவேளையில்,இராண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்ட 6 புதிய தமிழ்ப்பள்ளிகளின் திட்டங்கள் தொடரப்படும் என்றும் உறுதி அளித்த அவர் இது தொடர்பில் அமைச்சரவையிலுன் பேசப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதேவேளையில்,நிதி சுமையையோ அல்லது நிதி பற்றாக்குறையையோ காரணம் காட்டி தமிழ்ப்பள்ளியோ அல்லது சீனப்பள்ளியோ கட்டப்படுவது நிறுத்தப்படாது.அதன் வளர்ச்சியும் மேம்பாடும் நிறைவாகவே தொடரப்படும் என்றார்.

மலாக்கா அனைத்துலக வாணிப மையத்தில் இந்திய சமூகத்தோடு நடைபெற்ற சந்திப்பு நிகழ்விற்கு பின்னர் அவர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது 525 தமிழ்ப்பள்ளிகள் இருப்பதை சுட்டிக்காண்பித்த குலசேகரன் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிலும் வளர்ச்சியிலும் ஹராப்பான் அரசாங்கம் தொடர்ந்து தனித்துவம் செலுத்தும் என்றார்.


Pengarang :