SELANGOR

சீனப் புத்தாண்டு உதவிகளை முகமட் சாபு வழங்கினார்

கிள்ளான், ஜன.31:

சீனப் புத்தாண்டை முன்னிட்டு கம்போங் ஜாவா எக்கோன்சேவ் பேரங்காடி கோத்தா ராஜாவில் உள்ள சுமார் 100 குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு 100 வெள்ளி பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

இந்தப் பற்றுச் சீட்டுகளை வழங்கிய பேரங்காடியின் நடவடிக்கை போற்றப்படுவதோடு இதர தனியார் நிறுவனங்கள் இதனை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாபு கூறினார்.

எக்கோன்சேவ் பேரங்காடியின் நடவடிக்கையைப் போன்று வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு இதர தனியார் நிறுவனங்களும் உதவிட முன்வரவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் தற்போதுள்ள இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மக்கள் தொடர்ந்து பேண வேண்டும் என்று தற்காபுத் துறை அமைச்சருமான முகமட் சாபு வலியுறுத்தினார்.


Pengarang :