SELANGOR

சிலாங்கூர் மேரிடைம் கேட்வே (எஸ்எம்ஜி) சிறப்பு விருது பெற்றது

ஷா ஆலம், ஏப்.24:

சிலாங்கூர் மேரிடைம் கேட்வேயின் (எஸ்எம்ஜி) திட்டத்தின் தொடக்க கட்ட திட்டங்களில் ஒன்றான ‘சதுப்புநில புள்ளி’ இலாம் எம்எல்எஎ கௌரவ விருதின் நிலவடிவமைப்பு பிரிவில் சிறப்பு விருதை வென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பெட்டாலிங் ஜெயா, நியூ வேர்ல்ட் ஹோட்டலில் சனிக்கிழமை நடைபெற்ற நிலவடிவமைப்பு ஆயவு விருதளிப்பு விழாவில் இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு ஆலோசனை நிறுவனங்கள் என்ற முறையில் லண்டாசான் லுமாயான் சென்.பெர் (எல்எல்எஸ்பி) மற்றும் குளோஸ்டன் டிசைன் ஸ்டூயோ சென்.பெர் (சிடிஎஸ்) அந்த விருதை பெற்றுக் கொண்டன.

இந்த விருதானது மலேசிய நில வடிவமைப்பு கழகம் (இலாம்) வழங்கும் 9 பிரிவுகளுக்கான விருதுகளில் ஒன்றாகும் என்று எல்எல்எஸ்பி நிர்வாக இயக்குனர் ஷாஃபுல் அஸ்மென் நோர்டின் கூறினார்.

“சதுப்புநில புள்ளி திட்டமானது இயற்கை சுற்றுச் சூழலை பயன்படுத்தி பயோபிலிக் முறையில் சுகாதாரமிக்க சூழலை மேம்படுத்த கிள்ளான் ஆற்றின் 14ஆவது பகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டமாகும்” என்றார் அவர்.


Pengarang :