RENCANA PILIHANSELANGOR

சுங்கை சிலாங்கூரில் டீசல் கசிவு: தூய்மைக்கேட்டிற்கான காரணத்தை கேஎஸ்எஸ்பி ஆராய்கிறது

ஷா ஆலம், ஜூலை 22-

சுங்கை சிலாங்கூரில் டீசல் எண்ணெய் கலந்ததால் ஏற்பட்ட தூய்மைக்கேடு காரணமாக நீர் சுத்திகரிப்பு ஆலையின் 1,2 மற்றும் 3ஆம் கட்ட ஆலைகள் செயல்படாமல் போயின. இந்த விவகாரம் குறித்து செமஸ்தா குழும நிறுவனம் (கேஎஸ்எஸ்பி) விசாரணை செய்து வருகிறது.

சுங்கை சிலாங்கூர் பகுதிக்கு அருகில் உள்ள ஹங்துவா குளத்தில் டீசல் எண்ணெய் சிந்தியிருந்ததை கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது தரப்பினர் கண்டறிந்தனர் என்று கேஎஸ்எஸ்பி பொது தொடர்பு மற்றும் நிறுவன விவகார துறை மூத்த அதிகாரி அப்துல் வஹாப் நோர்டின் கூறினார்.

“உடனடியாக எங்களது அவசர வேளைக்கான நடவடிக்கை குழு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று எண்ணெய் கசிவை உறுதி செய்ததோடு அதனைக் கட்டுப்படுத்தும் நவடிக்கையை மேற்கொண்டனர்” என்றார் அவர்.

“ அங்குள்ள நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு அமலாக்கத் தரப்போடு ஒத்துழைப்பு நல்கி வருகிறோம்” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :