SHAH ALAM, 29 JULAI
SELANGOR

2019 சிலாங்கூர் கலாச்சார நடன போட்டி: கலாச்சார மேம்பாட்டிற்கு வித்திடுகிறது

ஷா ஆலம், ஜூலை 29-

இங்குள்ள அரங்கில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் சிலாங்கூர் கலாச்சார நடன போட்டியில் வெற்றிக் கோப்பையை வெல்வதற்கு 40 குழுக்கள் பங்கேற்றன.
சிலாங்கூர் கல்வி இலாகாவுடன் இணைந்து சிலாங்கூர் மலாய் மற்றும் பாரம்பரிய கலாச்சார கழகம் ஏற்பாடு செய்த இப்போட்டியில் ஆரம்பப் பள்ளி, இடைநிலைப் பள்ளி மற்றும் உயர்கல்வி கழக மாணவர்களுக்கான பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன என்று தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட இப்போட்டியில் அதிகமான குழுக்கள் பங்கெடுத்தன என்றும் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் 20 குழுக்கள் மட்டுமே பங்கேற்றன என்று கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, மலாய் பாரம்பரிய துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷிட் அசாரி கூறினார்.

“இம்முறை, சிலாங்கூரைச் சேர்ந்த குழுக்கள் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் இருந்து வந்த குழுக்கள் பங்கேற்றதாக அறிகிறேன். இது இம்மாநிலத்தில் கலாச்சாரம் மேம்பாடு கண்டு வருவதற்கான் ஓர் அறிகுறியாகும். இது ஆண்டுதோறும் மேலும் மேம்படும் என்று நான் நம்புகிறேன்” என்றார். அவர்.


Pengarang :