NATIONALRENCANA PILIHAN

1எம்டிபி நிதியைப் பெற்ற நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் அபராத அறிக்கை! – எஸ்பிஆர்எம் அறிவிப்பு

புத்ராஜெயா, அக்.7-

1எம்டிபி நிறுவனத்திடமிருந்து 420 மில்லியன் வெள்ளியை பெற்ற 80 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அபராத அறிக்கை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பெறப்பட்ட நிதியை திரும்ப செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக் ஆணையத்தின் தலைவர் லத்தீஃபா கோயா கூறினார்.

சராசரியாக சம்பந்தப்பட்ட தனிநபர்கள் 500,000 வெள்ளி முதல் 25 மில்லியன் வெள்ளி வரை பெற்றுள்ளதாகவும் நிறுவனங்கள் 134 மில்லியன் வெள்ளி வரை பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அதிக நிதியைப் பெற்ற நிறுவனங்களில் 134 மில்லியன் வெள்ளியைப் பெற்ற சோலார் ஷைன் நிறுவனம் முதலிடம் வகிப்பதாகவும் தனிநபர்களில் முன்னாள் சிஐஎம்பி தலைவர் டத்தோஸ்ரீ நஸிர் துன் ரசாக் 25.7 மில்லியன் வெள்ளியை பெற்று முதலிடம் வகிக்கப்பதாகவும் லத்தீஃபா குறிப்பிட்டார்.


Pengarang :