NATIONAL

அஸ்மின்: நீதியை நிலைநாட்டும் பெருநாள் தீபாவளி

கோலா லம்பூர், அக்டோபர் 26:

தீயசக்திகளை அழித்து நீதியை நிலைநாட்டும் பெருநாளாக தீபாவளி அல்லது தீபத் திருநாள் விளங்குகிறது என பொருளாதார விவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

இந்திய நாகரீக வரலாற்றின் வழி பல்வேறு நற்பண்புகளையும் மற்றும் வரலாற்றுப் பாடங்களையும் கற்றுக் கொள்ள முடியும். இதில் நீதியை நிலைநாட்ட போராடும் நற்குணமும் அடங்கும்.

” தீபத் திருநாளான தீபாவளி நீதியை நிலைநாட்டும் தினமாகும். இதுவே உலகின்  சனதம தர்ம நீதியாகும். மனித குலத்திற்கு சவாலாக இருக்கும் பொய் மற்றும் அநீதியை அழிக்கும் சக்தி. ஆகவேதான் உண்மை மற்றும் நீதியை நிலைநாட்ட போராட வழி தேட வேண்டும்,” என்று தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

மலேசிய இனம் பொருளாதார மேம்பாட்டை மட்டும் போராட்டமாக கொண்டிருக்காமல் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை பேணிக் காத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

” இந்தியர், இந்து மற்றும் சீக்கியர்களுடன் அனைத்து மலேசிய மக்களுக்கும் ஒன்றாக தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்.

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.” என அஸ்மின் அலி பெர்னாமா செய்திக்கு பதிவு செய்திருக்கிறார்.


Pengarang :