NATIONAL

பிளஸ் நிறுவனத்தின் கடன்களை அடைக்க சிறந்த வழிகளை அரசாங்கம் ஆராய்கிறது

பேங்காக், நவம்பர் 4:

பிளஸ் மலேசியா நிறுவனத்தின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.
இந்நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளராக இருக்கும் அரசாங்க முதலீட்டு நிறுவனமான கஸானா நேஷனல் பெர்ஹாட், பிளஸ் நிறுவனத்தின் கடன்களை நிர்வகிப்பதே தற்போது மேற்கொள்ளக் கூடிய சிறந்த நடவடிக்கையாகும் என்றார் அவர்.

“நாம் சிறந்த வழிமுறையை தேடி வருகிறோம். அப்படி கஸானா நிறுவனத்தால் கடன்களை அடைக்க முடிந்தால், நல்லதுதானே” என்று 35ஆவது ஆசியான் மாநாட்டையொட்டி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மகாதீர் கூறினார்.
முன்னதாக, கஸானாவின் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாரஹ்ரில் ரிட்ஸா ரிட்சுவான், நாட்டின் மிகப் பெரிய நெடுஞ்சாலை நிறுவனமான பிளஸ் நிறுவனத்தை விற்பதில் நாட்டின் முதலீட்டு நிறுவனத்திற்கு ஆர்வமில்லை என்றும் கூறியிருந்தார்.


Pengarang :