SELANGOR

514 ‘ஸீரோ டூ ஹீரோ’ பங்கேற்பாளர்கள் சுய வருமானம் ஈட்ட முடியும் !!!

ஷா ஆலம், நவம்பர் 5:

சிலாங்கூர் ஹிஜ்ரா கடனுதவி திட்டத்தில் ஒரு அங்கமாக விளங்கும் ‘ஸீரோ டூ ஹீரோ’ வழி 514 பங்கேற்பாளர்கள்  சுய வருமானம் ஈட்ட முடியும் என சிலாங்கூர் மாநில தொழில் முனைவர், புறநகர் மேம்பாடு, கிராமம் மற்றும் பாரம்பரிய கிராம மேம்பாடு நிரந்தரக்குழு ஆட்சிக்குழு உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் மாநில சட்ட மன்ற கூட்டத்தில் பேசினார். கடந்த 2016-இல் தொடங்கிய இத்திட்டத்தின் வழி இதுவரை 676 பங்கேற்பாளர்கள் பயனடைந்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார். இதில் 62 தொழில் முனைவர்கள் தொடர்ந்து பயிற்சி பெற்று வருவதாக ரோஸ்ஸியா என்று மேலும் விவரித்தார்.

” டாரூல் எசான் கல்லூரி நடத்திய ஆய்வில் இத்திட்டம் மிகச்சிறந்த பலன்களை தந்துள்ளது. பங்கேற்பாளர்களின்  வருமானத்தை பெருக்க சிறந்த ஒரு தளமாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தில், பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை நிறுவனத்தின் கீழ்  ஆறு மாத கண்காணிப்பில் ரிம 1000 முதல் ரிம 5000 வரை ஈட்ட முடியும்,” என்று செமினி சட்ட மன்ற உறுப்பினர் ஸாக்காரியா ஹானாபி கேள்விக்கு பதில் அளித்த போது இவ்வாறு ரோஸ்ஸியா விளக்கம் தந்துள்ளார்.


Pengarang :