NATIONAL

மூழுகும் சம்பவங்கள் நிகழும் பகுதிகளில் எச்சரிக்கைப் பலகையைப் பொருத்துவீர்

கோலாலம்பூர், நவ.28-

அதிகமான பயணிகளைக் கவரும் தண்ணீர் நடவடிக்கை நடைபெறும் பகுதிகளில் ஆபத்து நிறைந்த பகுதிகளை ஊராட்சி மன்ற தரப்பினர் அடையாளம் கண்டு அங்கு எச்சரிக்கை பலகைகளைப் பொருத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அதேவேளையில், பயணிகள் அதிகளவு கூடும் ஆறு, கடற்கரை மற்றும் நீர் வீழ்ச்சி பகுதிகளைக் கண்காணிப்பதற்கு அதிக எண்ணிக்கையிலான அங்கத்தினர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படை பணியில் அமர்த்த வேண்டும் என்று சமூக பாதுகாப்பு அமைப்பின் (இக்காத்தான்) தலைவர் டான்ஸ்ரீ லீ லாம் தாய் வேண்டுகோள் விடுத்தார்.

ஆபத்தான பகுதிகளில் தீயணைப்புப் படை சிவப்பு வர்ண கொடிகளைப் பறக்க விடலாம், அதேநேரம், ஆபத்து நிறைந்த பகுதிகளில் ஊராட்சி மன்றம் எச்சரிக்கை பலகைகளைப் பொருத்தி அப்பகுதிகளில் கூடும் பயணிகள் அங்கு நீர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
இது போன்ற விவகாரங்களில் அனைத்து தரப்பினரும் மெத்தனப் போக்கை கைவிட்டு கவனம் செலுத்துவது அவசியமாகும் என்று அவர் நினைவுருத்தினார்.


Pengarang :