KUALA KANGSAR, 28 Nov — Pemandu teksi, V. Balamurugan, 37, yang dituduh memberi sokongan kepada kumpulan pengganas LTTE dibawa keluar selepas Mahkamah Sesyen hari ini menetapkan kesnya disebut semula pada 12 Dis hadapan. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

எல்டிடிஈ: மறு விசாரணை டிசம்பர் 12ஆம் தேதி

கோலகங்சார், நவ.28-

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு (எல்டிடிஈ) ஆதரவாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில்நுட்பவியலாளர் எஸ்.அரவிந்தன் மற்றும் டாக்சி ஓட்டுநர் வி. பாலமுருகன் மீதான வழக்கு மீண்டும் அடுத்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறும் என்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் தேதி நிரணயித்தது.

இந்த வழக்கு விசாரணை விரைவாக நடைபெற வேண்டும் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞரான மெத்தியுஸ் ஜூட் விடுத்த கோரிக்கையை ஏற்று இவ்வழக்கு தொடர்பான அறிக்கையை மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் மற்றும் வன்முறை நிபுணர் தயாரிப்பதற்கான கால அவகாசம் ஆகியவற்றைக் கருத்தில் இத்தேதியை நிர்ணயித்ததாக நீதிபதி ரோஷிடா இஷாக் கூறினார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் எல்டிடிஈ அமைப்புக்கு ஆதரவு வழங்கி வந்ததாக கடந்த அக்டோபர் 29ஆம் தேதி அரவிந்தன ( வயது 27) மற்றும் பாலமுருகன் ( வயது 37( ஆகிய இருவரும் கோலகங்சார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இதே அமைப்புடன் தொடர்பு படுத்தப்பட்டு சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலாக்கா, காடெக் சட்டமன்ற உறுப்பினருக்கு ஜாமீன் வழங்குவதா இல்லையா என்ற தீர்ப்பு நாளை வழங்கப்படும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேறு தேதி நிர்ணயித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :