NATIONAL

ஏழைகளின் வீடுகளை பழுது பார்க்க அரசாங்கம் ரிம 28.5 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது

கோலா லம்பூர், டிசம்பர் 11:

எதிர் வரும் 2020-இல் நகர்புற ஏழைகளின் வீடுகளை பழுது பார்க்கும் திட்டத்திற்கு  மத்திய அரசாங்கம் ரிம 28.5 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி த்துறை துணை அமைச்சர் செனட்டர் டத்தோ ராஜா காமாரூல் பஹ்ரீன் ராஜா அமாட் பஹாரூடின் ஷா இன்று மேல்சபையில் தெரிவித்தார். இந்த ஆண்டில் இதே திட்டத்திற்கு ரிம 15 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக அவர் மேலும் விவரித்தார்.

2030 மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வறுமை ஒழிப்பு நோக்கத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை அமைகிறது என்று செனட்டர் டத்தோ அப்துல் கானி முகமட் யாசீன் கேள்விக்கு பதில் அளித்த போது இவ்வாறு ராஜா பஹ்ரீன் விளக்கம் தந்துள்ளார். நகரத்தில் வாழ்ந்து வரும் பி40 வர்கத்தினர் மிக மோசமான சூழ்நிலையில் வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில் வீடுகளை மறுசீரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளதா என்ற கேள்வியை முன் வைத்தார்.


Pengarang :