Dato’ Menteri Besar Selangor, Dato’ Seri Amirudin Shari (dua, kanan) bersama Pengarah PPAS, Mastura Muhamad (kanan) menyertai Jom Baca Untuk 10 Minit ketika Majlis Perasmian Pesta Buku Selangor 2020 di Shah Alam Convention Centre, Shah Alam pada 1 Mac 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
SELANGOR

அரசு ஊழியர்கள் போட்டியாற்றல் மற்றும் ஊழலில் இருந்து விடுபட்டவர்களாக இருக்க வேண்டும்! -மந்திரி பெசார்

ஷா ஆலாம், மார்ச் 1:

எதிர்க் கட்சியின் சிந்தனைப் போக்கைக் களைய முக்கிய அடைவு நிலைக்கு முக்கியத்துவம் அளிப்பதன் வழி சிலாங்கூரில் உள்ள பொதுச் சேவை ஊழியர்கள் போட்டியாற்றல் மிக்கவர்களாகவும் ஊழலில் இருந்து விடுபட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஊழியர்கள் முன்னுதாரணமாக இருப்பதோடு போட்டியாற்றல் நிறைந்தவர்களாகவும் மக்களுக்கான சேவைத் தரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துபவர்களாக இருப்பது அவசியம் என்று மந்திரி பெசார் வலியுறுத்தினார்.

“2010 ஆம் ஆண்டுவாக்கில் கீழறுப்பு மற்றும் சந்தேகம் போன்ற தீய நடவடிக்கைகள் நடந்தபோதிலும் இப்போது இவற்றிக்கு இடமளிக்கக் கூடாது” என்றார் அமிருடின்.
“நேர்மைப் பண்புகள் நிறைந்த பொதுச் சேவை ஊழியர்களின் கலாச்சாரம் அமையும் வகையில் நேர்மை மற்றும் பொறுப்புகள் தற்காக்கப்பட வேண்டும். ஊழலில் இருந்து விடுபடுவதாக உதட்டளவில் மட்டும் பேசக் கூடாது. சிலாங்கூர் பொதுச் சேவை ஊழியர்கள் ஊழலில் இருந்து முற்றாக விடுபட்டவர்களாக இருக்க வேண்டும்” என்று கடந்த 23 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை இந்தோனேசியா, பண்டோங்கில் நடைபெற்ற சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்களுடனான கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.


Pengarang :