NATIONAL

இபிஎப்: ஏப்ரல் முதல் தேதியில் இருந்து 7%-ஆக குறைகிறது

கோலா லம்பூர், மார்ச் 13:

தொழிலாளர் சேமநிதி வாரியம் (இபிஎப்) 2020 பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கட்டாய சேமிப்பு விகிதத்தை 11%-இல் இருந்து 7%-ஆக குறைத்துள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1-இல் தொடங்கி டிசம்பர் 2020-வரை நடப்பில் இருக்கும் என இபிஎப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இபிஎப் சட்டம் 1991 மூன்றாவது பட்டியலில் கீழ் அடங்கும் என்றும் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் இது பொருந்தும் என அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று இபிஎப் மேலும் குறிப்பிட்டுள்ளது.


Pengarang :