NATIONAL

ஸ்கைப், வாட்ஸ் அப் செயலிகள் உதவியுடன் பணியாளர்கள் வீட்டில் இருந்தபடி பணிபுரிகின்றனர்!

ஷா ஆலம், மார்ச் 18-

நடமாட்ட கட்டுபாடு உத்தரவுக்கு ஏற்ப வீட்டில் இருந்தபடி பணிபுரியும் தனியார் துறை பணியாளர்கள், மற்றவர்களைத் தொடர்பு கொள்வதற்கு குறிப்பாக கூட்டமாக விவாதிப்பதற்கு ஸ்கைப் மற்றும் வாட்ஸ் அப் செயலிகளைப் பயன்படுத்துகின்றனர்.
தொழில்சாலை பொறியியலாளரான ஷாஃபிகா ஜைனுரின் (26) வீட்டில் இருந்தபடியே தனது பணியைப் புரிகின்றதாகவும் தனது பணியாளர்களுக்கான உத்தரவுகளையும் தகவல்களையும் அனுப்ப மற்றும் பெற ஸ்கைப் செயலியைப் பயன்படுத்துவதாக கூறுகிறார்.

“அனைவரும் வீட்டிலேயே வழக்கம் போல் பணி புரிகின்றனர். தினசரி மாலை 10 மணி, பிற்பகல் 2 மற்றும் 4 மணி என மூன்று கூட்டங்கள் நடைபெறுகின்றன. காலையில் நடைபெறும் கூட்டத்தில் அன்றைய பணிகளுக்கு தயார் படுத்து குறித்து விவாதிக்கப்படும். வழக்கத்திற்கு மாறாக ஏதும் இருந்தால் மட்டுமே அலுவலகத்த்திற்கு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் அவர்.

இதனிடையே, தொழில்நுட்ப பணியாளரான ஷாஹ்ரில் நிஜாம் கூறுகையில், தனது நிறுவன நிர்வாகம் அனைத்து பணியாளர்களையும் தயார் நிலையில் இருக்கும்படி பணித்துள்ளதாக சொன்னார். அனைத்து வகையான உத்தரவுகளும் வாட்ச் அப் செயலி வகை பரிமாறப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

கொண்டேக் லென்ஸ் ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கு இவரது நிறுவனம் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கப்பலை[ பயன்படுத்துவதாக ஷாரில் தெரிவித்தார்.


Pengarang :