NATIONALRENCANA PILIHAN

சேமநிதி வாரிய சந்தாதாரர்கள் ஒரு வருடத்திற்கு மாதம் ரிம 500-ஐ எடுக்கலாம்

ஷா ஆலம், மார்ச் 23:

சேமநிதி வாரிய சந்தாதாரர்கள் (இபிஎப்) தங்களது சேமிப்பில் இருந்து ஒரு வருட காலத்திற்கு மாதம் ரிம 500-ஐ எடுக்கலாம் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் வழி சுமார் 12 மில்லியன் சந்தாதாரர்கள் பயன் பெறும் வகையில் அமையும் என்பதில் சந்தேகமில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

” சேமிப்பு நிதியை வெளியாக்கும் நடவடிக்கை ஐ-லெஸ்தாரி என்று அழைக்கப்படும். இதன் மூலம் இபிஎப் சேமிப்பு நிதியை 55 வயதுக்கு குறைந்த சந்தாதாரர்கள் இரண்டாவது கணக்கு வழி வெளியாக்க முடியும் எனவும் ஏறக்குறைய  ரிம 40 பில்லியன் பட்டுவாடா செய்யப்படும். இந்த நடவடிக்கையின் வழி மலேசிய மக்கள் அதிகமான பணத்தை கொண்டு பொருட்களை வாங்க முடியும். அது மட்டுமல்லாமல் எதிர் வரும் ஏப்ரல் தொடங்கி சேமநிதி வாரிய சந்தாதாரர்களின் மாதாநதிர  பங்களிப்பு விகிதம் 4% குறைந்த நிலையில் மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரிக்கும்,” என்று இன்று புத்ராஜெயாவில் கோவிட்-19 சிறப்பு அறிவிப்பில் பிரதமர் தெரிவித்தார்.


Pengarang :