Pengguna mengenakan topeng muka ketika membeli barang keperluan harian berikutan Perintah Kawalan Pergerakan bagi mengawal wabak Covid-19 di Tesco Kajangpada 23 Mac 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONALRENCANA PILIHAN

பிகேபி காலகட்டத்திற்கு பிறகு புதிய பழக்கத்தை நாம் தொடர்ந்து பின்பற்றுவோம் !!!

கோலா லம்பூர், ஏப்ரல் 23:

கோவிட்-19 நோய் பரவலை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ந்து இருக்கும் நிலையில், பிகேபி முடிந்த பின் பொது மக்கள் வாழ்க்கையில் புதிய ‘ஒரு வழக்கத்திற்கு’ தங்களை பழக்கிக் கொள்ள வேண்டும் என பேராசிரியர் டத்தோ டாக்டர் அடிபா கமாரூஸாமான் நினைவு படுத்தினார். மலாயா பல்கலைக் கழகத்தின் மருத்துவத்துறை தலைவரான டாக்டர் அடிபா கோவிட்-19 வைரஸ் இன்னும் முழுமையாக அழிந்து விடவில்லை என்றும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

” நாம் பழைய நிலைக்கு திரும்பும் காலம் இன்னும் வரவில்லை. கோவிட்-19 வைரஸ் மிக சுலபமாக பரவக்கூடிய ஒன்று, 98% இன்னும் நோய் தடுப்பு சக்தி வாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பி கண்டு பிடிக்கவில்லை. நாம் தொடர்ந்து மக்கள் கூட்டம் அல்லது பேரணிகளை நடத்தினால், உடல் சுத்தம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றி நடக்கவில்லை என்றால் நாம் பழைய நிலைக்கு திரும்ப நேரிடும்,” என்று இணையத்தில் நடைபெற்ற நேரலை கலந்துரையாடலில் இவ்வாறு பேசினார்.


Pengarang :