Wakil media mengambil gambar sistem perparitan yang telah dinaik taraf bagi tujuan tebatan banjir di kawasan Padang Jawa, Klang. Foto ASRI SAPFIE/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

பேரிடர் நிகழும் இடங்களின் சிக்கல்களை எம்திஇஎஸ்-க்கு கொண்டு செல்லப்படும் !!!

ஷா ஆலம், ஜூலை 12:

சிலாங்கூர் மாநிலத்தில் பேரிடர் நிகழும் இடங்கள் என அடையாளம் காணப்படும் பகுதிகளை சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை கூட்டத்திற்கு (எம்திஇஎஸ்) உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று சிலாங்கூர் மாநில பேரிடர் நிர்வாகப் பிரிவின் தலைவர் அமாட் ஃபைரூஸ் முகமட் யூசுப் தெரிவித்தார். இதன் அடிப்படையில், எம்திஇஎஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினையை நேரில் கண்டறிந்து தகுந்த நடவடிக்கையை எடுக்கும் என்றும் மொத்த செலவுகளையும் ஒதுக்கீடு செய்யும் என்றார் அவர்.

” ஒவ்வொரு சம்பவங்கள் நடந்த செய்தி வந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அதிகாரி மற்றும் ஊராட்சி மன்றங்களின் அதிகாரிகள் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு அமாட் ஃபைரூஸ் தெரிவித்தார்.

ஒவ்வொரு பேரிடர் நிகழும் இடங்களாக கருதப்படும் பகுதிகளை ஊராட்சி மன்றங்கள், நீர்பாசன மற்றும் வடிகால் இலாகா மற்றும் பொதுப் பணித்துறை ஆகிய அரசாங்க இலாகாகள் கண்காணித்து வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :