Dato’ Menteri Besar, Dato’ Seri Amirudin Shari menyerahkan bantuan kepada mangsa banjir di Menara MPKj , Kajang pada 20 Julai 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
SELANGOR

மாநில அரசாங்கம் நிவாரண நிதியாக ரிம 500 மற்றும் சமையல் பொருட்களை வழங்கும்- மந்திரி பெசார்

காஜாங், ஜூலை 20:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் திடீர் வெள்ள நிவாரண நிதியாக ரிம 500-ஐ உலு லங்காட், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். அதுமட்டுமின்றி,  இன்றியமையாத சமையல் பொருட்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க வகை செய்யப் பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

” நாம் உண்மையில் பார்க்கப் போனால், திடீர் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படாது. வெள்ள நிவாரண நிதி எப்போதும் வெள்ளக் காலகட்டத்தில் மட்டுமே வழங்கப்படும். ஆனாலும், மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அரசு இலாகாக்கள் உண்மையில் பாதிக்கப்பட்டு மக்களின் விவரங்களை எடுக்க வேண்டும். யாரும் இதில் விடுபடாமல் இருக்க உறுதி செய்ய வேண்டும்.இந்த வேளையில், அரசு சாரா இயக்கங்கள் முன்வந்து உதவ வேண்டும் என நான் எதிர் பார்க்கிறேன்,” என்று காஜாங்கில்,  கம்போங் ஜம்பு மற்றும் தாமான் முஹீபா ஆகிய இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த போது இவ்வாறு அமிரூடின் ஷாரி வலியுறுத்தினார்.


Pengarang :