A health worker holds test kits before taking a swab to collect samples for COVID-19 coronavirus from people in Gombak on the outskirts of Kuala Lumpur on April 22, 2020. (Photo by Mohd RASFAN / AFP)
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19 நோய் சம்பவங்கள் மீண்டும் ஒரு இலக்கணமாக குறைந்துள்ளது !!!

புத்ராஜெயா, ஜூலை 30:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,964 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 8 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 28 உள்நாட்டு சம்பவங்கள் ஆகும். இன்று எந்த  ஒரு  மரணமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், இதுவரையிலான மரண எண்ணிக்கை 124-ஆகவே உள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். மேலும் ஒருவர் சுவாசிக்க கருவி உதவியை பெறுகிறார். மேலும், இன்று 5 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,617 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 96.1 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :