PBTSELANGOR

பொது பூங்காக்களில் மது அருந்த தடை பொது மக்கள் மதித்து நடக்கின்றனர்

ஷா ஆலம், அக் 1-  சிலாங்கூர் மாநில அரசு கடந்த ஜூலை மாதம் அமுல்படுத்திய பொது பூங்காக்களில் அருந்துவதற்கான தடையை பொது மக்கள் மதித்து நடப்பதாக ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் சொன்னார்.

இதனால் பொது பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களின் தரம் மேம்பட்டு- ள்ளதோடு அங்கு செல்வோரும் பாதுகாப்பாக இருப்பதை உணர்வதாக அவர் கூறினார். 

இது ஒரு நல்ல அறிகுறியாகும். பொது இடங்களில் மது அருந்தியது தொடர்பில் இது 
வரை எந்த குற்றப் பதிவும் வெளியிடப்படவில்லை. பொது மக்கள் தொடர்ந்து சட்டத்தை மதித்து நடப்பார்கள் என நம்புகிறேன் என்றார் அவர்.

அதேசமயம், புகை பிடிப்பது மற்றும் மின் புகையை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்களையும் பொது மக்கள் மதித்து நடக்க வேண்டும் என்று அவர் 
வலியுறுத்தினார்.

பொது இடங்களில் குறிப்பாக பூங்காக்கள் மற்றும் மைதானங்களில் மது அருந்துவது 
மற்றும் புகை பிடிப்பதற்கு எதிரான சட்டத்தை சிலாங்கூர் அரசு கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி அமல்படுத்தியது.

இத்தகைய சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் சிலாங்கூர் ஆகும்.

இக்குற்றங்களைப் புரிவோருக்கு 2005 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில ஊராட்சி 
மன்றங்களின் துணைச் சட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும்.

 


Pengarang :