ALAM SEKITAR & CUACA

தாமான் மூர்னியில் வெள்ளப் பிரச்னையைக் களைய வெ.16 லட்சம் செலவில் வெள்ள நீர் சேகரிப்பு குளம்

ஷா ஆலம், ஜன 10- செராஸ், பத்து 9, தாமான் மூர்னி, ஜாலான் 5இல் சுமார் 16 லட்சம் வெள்ளி செலவில் வெள்ள நீர் சேகரிப்பு குளம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

காஜாங் நகராண்மைக்கழகத்தின் நிதி ஒதுக்கீட்டில் இந்த குளம் நிர்மாணிக்கப்படுவதாக பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியு கீ கூறினார்.

இந்த குளத்தின் நிர்மாணிப்புப்  பணிகள்  வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி ஆறு மாத காலத்தில் முற்றுப்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த குளம் 900 கன மீட்டர்   மழை நீரை சேகரிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும். இதன் மூலம் கனத்த மழையின் போது அப்பகுதியில் ஏற்படக்கூடிய திடீர் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றார் அவர்.

‘மழையின் போது வீடமைப்புப் பகுதிகளில் நீர் விரைவாக புகாமலிருப்பதை உறுதி செய்வதற்காக இப்பகுதியிலுள்ள வடிகால்கள் தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

இத்திட்டத்தை அமலாக்குவதன் மூலம் இப்பகுதி மக்கள் கடந்த இருபது ஆண்டுகளாக எதிர்நோக்கி வந்த திடீர் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


Pengarang :