EKSKLUSIFNATIONALPENDIDIKANSELANGORYB ACTIVITIES

சிலாங்கூர் மாநில மந்திரி புசாரின்  தைப்பூசத் தின வாழ்த்து செய்தி

ஷா ஆலம் ஜன. 28 ;- எல்லா மலேசியர்களுக்கும் குறிப்பா இந்துக்களுக்கு எனது தைப்பூச வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாகத் தமிழ் சமூகத்தினருக்குத் தைப்பூசத்  தின நல்வாழ்த்துகள்.

பத்து அல்லது பத்தாவது மாதமான ‘ தை ‘மாதம் பூசம் முழு நிலவு பௌர்ணமி இவைகள் இரண்டும் சேர்ந்து தைப்பூசம் என்று  உருவானதாக அறிகிறேன். இந்த நாளைச் சிலாங்கூர் தமிழ்மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதைக் காண்கிறேன்.

நான் இங்கு, முன்பு பத்துமலை என அழைக்கப்பட்டுப் பின்பு சுங்கைதுவா என்று பெயர் மாற்றப்பட்ட இத்தொகுதி மக்களின் பிரதிநிதி என்ற ரீதியில் உலக முழுவதிலுமிருந்து இந்துக்கள் வந்து பத்துமலை குகை கோவிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கடந்து முருகக் கடவுளை மிக முக்கியத் தொய்வமாகக் கொண்டு வழிப் படுகிறார்கள் என்பதை அறிவேன்.

இந்துக்களின் கந்தப்புராண இதிகாசப்படி முருகர் தந்தையின் கட்டளையை ஏற்று உலகம் எதிர்கொண்ட தீயவைகளை வென்று, முருகன் வேலும், மயிலுமாய்ப் பத்தர்களுக்குக் காட்சி தந்த நாளை இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

உலகுக்கு அது உணர்த்தும் அறிவுரை தந்தை சொல் மதித்து அதர்மத்தை  அழித்துத் தர்மம் என்னும் நீதி ஓங்க செய்யப் பாடுபட வேண்டும்.

இந்தத் திருவிழா இந்துக்களைத் தியாகங்கள் செய்ய அழைக்கிறது, மேலும் அவர்கள், தங்கள் குழந்தைகள் மற்றும் அவர்களது உறவினர்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், எந்தத் தீங்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடாது.

தியாகம், விசுவாசத்தின் அடையாளமாக இந்துக்கள் காவடியை அல்லது ‘பால் குடம்’ எனப்படும் பால் நிரப்பப்பட்ட குடத்தைத் தூக்கி, அவர்களின் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கும் நேரம் இது.

தந்தைகள் தங்கள் குடும்பங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள், அதே நேரத்தில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் எதிர்காலத் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள் என்று பிரார்த்தனை செய்வார்கள், அதே நேரத்தில் குழந்தைகள் பெற்றோருக்கு உதவ வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள்.

ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் தங்கள் பிள்ளைகள் எதிர்நோக்கும் முக்கியத் தேர்வுகளுக்கு இன்னும் குறுகிய காலங்களே எஞ்சி உள்ளதையும், அவர்கள் வாழ்வில் எல்லா இடர்ப்பாடுகளையும் செவ்வனே கடக்க இறைவனிடம் பிராத்திக்க, இறைவனிடம் ஆசிபெற ஒரு முக்கிய நாளான தைப்பூசத்தில், முடியவில்லையே என்ற ஏக்கம் இந்துக்களிடம் உள்ளதை  என்னால் உணர முடிகிறது.

ஆனால், அதற்குக் கோவிட் 19 நோய்த்தொற்று நடமாட்டக் கட்டுப்பாடு தடையாக இருப்பது அவர்களுக்கு எவ்வளவு மன வேதனை அளிக்கும் விஷயம்.  அதனால்தான், தைப்பூசம் இந்த முறை இந்துக்களுக்கு மிகவும்  மாறுபட்டதாக, அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் மதப் பொறுப்புகளைச் சற்று வித்தியாசமான முறையில் நீங்கள் நிறைவேற்றும் நேரத்தில், பெற்றோர்களே, இந்தத் தருணங்களில் எல்லா வகையிலும் உங்கள் குழந்தைகளுக்கு முழு ஆதரவையும் கொடுங்கள். தற்போது கல்விச்சாலைகள் செயல் குன்றி இருப்பதால், மடிகணினிகள் போன்ற மற்றுக் கல்வி முறையில் அவர்கள் கல்வி கற்க நாம் உதவ வேண்டும். அதற்காகப் பெற்றோர்கள் செய்யும் பெரும் தியாகங்களையும் நான் தனிப்பட்ட முறையில் கண்டுள்ளேன்.

மேலும் பரீட்சைக்கு உட்கார்ந்திருக்கும் மாணவர்களே , நீங்கள் மிகவும் தனித்துவமான தலைமுறையாக இருப்பதால், தொற்றுநோய்களின் இந்தச் சகாப்தத்தில் பல்வேறு சவால்களுடன் தேர்வை எதிர்கொள்கிறீர்கள்.

இருப்பினும், நீங்கள் கடந்து வந்த அனைத்து முயற்சிகளும் , பயிற்சிகளும் நிச்சயமாகச் சிறந்த முடிவுகளைத் தரும்.

மீண்டும், சிலாங்கூர் மாநில அரசு சார்பாக, சிலாங்கூர் மற்றும் மலேசியாவில் உள்ள அனைத்து இந்து சமூகத்திற்கும் தைப்பூசத் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்  சிலாங்கூர் மாநில மந்திரி புசார்  டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி,

 

 


Pengarang :