ECONOMYNATIONALSELANGOR

வேலையின்மைப் பிரச்னையைத் தீர்ப்பதில் சிலாங்கூர் கெர்ஜாயா திட்டம் உதவி

ஷா ஆலம், ஜன 28- இளையோர் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் வசிப்போர் எதிர்நோக்கும் வேலையில்லாப் பிரச்னையைத் தீர்ப்பதில் சிலாங்கூர் கெர்ஜாயா திட்டம் பெரிதும் துணை புரியும் என்று மலேசிய இளைஞர் மன்றத்தின் தலைவர் ஜூபிரி ஜோஹா நம்பிக்கைத் தெரிவித்தார்.

கடந்தாண்டு இரண்டாம் காலாண்டு வரையிலான காலக்கட்டத்தில் 15 முதல் 30 வயது வரையிலான இளையோர்  மத்தியில் காணப்பட்ட வேலையில்லாப் பிரச்னை 8.9 விழுக்காடு அதாவது 502,300 ஆக இருந்ததாக அவர் சொன்னார்.

சிலாங்கூர் அரசின் இந்த திட்டம் வேலை தேடும் இளைஞர்களுக்கு குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில்  வசிப்பவர்களுக்கு மிகுந்த பலனைத் தரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இயங்கலை வாயிலாக நடத்தப்படும் தொழில் திறன் மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட நிபுணத்துவ பயிற்சிகள் தொழிலியல் புரட்சி 4.0 இயக்கத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் வேலையில்லாப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் சிலாங்கூர் அரசாங்கம்  எனும் அகப்பக்கத்தை நேற்று தொடக்கியது.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்கு பிந்தைய மூன்றாண்டு காலத்தில் சிலாங்கூர் கெர்ஜாயா திட்டத்தின் வாயிலாக பத்தாயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.


Pengarang :