ECONOMYPBTSELANGOR

பெண் வர்த்தகர்களை டிஜிட்டல் மயத்தை நோக்கி இட்டு செல்வோம்

ஷா ஆலம், ஜனவரி 30,  வர்த்தகர்களை, குறிப்பாகப் பெண்களை டிஜிட்டல் மயமாக்களை  நோக்கி நகர்த்துமாறு நகராண்மைக்கழக அதிகாரிகள் (பிபிடி) வலியுறுத்தப் படுகிறார்கள்.

சிலாங்கூர் மாநிலத் தொழில்முனைவோர் மேம்பாடு  ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறுகையில் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்களில் பலர் இன்னும்  தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்பத்  தங்களைத் தயார் படுத்திக்கொள்ள முன்வரவில்லை, என்றும் அவர்களுக்கு  அதற்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

“இந்தத் துறையில் பெண்களின் மனதை ஈர்ப்பது எங்களுக்குச்  சவாலாக  உள்ளது. இதனால் அவர்கள் இன்று தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சிக்கு ஏற்ப டிஜிட்டலை நோக்கிய பயணம்  சுணக்கம் கண்டுள்ளது  என்றார் அவர்.

“எனவே, வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யக்கூடிய வணிக மற்றும் மின்-பணப்பையின் இடத்தில் கியூஆர் குறியீட்டை உருவாக்குவது  போன்ற ஆரம்ப நடவடிக்கைகளின் வழி  ஊராட்ச்சி மன்றங்களும்   ஆன்லைன்  கல்விக்கு வித்திட வேண்டும்”  என்று நேற்று இரவு பேஸ்புக்கில் ஒரு  சம்பாஷணையில்  கூறினார்.

டாருல் ஏஹ்சன் வணிகத் திட்டம் (நாடி) மற்றும் சிலாங்கூர் இ-டப்தார் உள்ளிட்ட பெண்கள் தங்களை வளர்த்துக் கொள்ள மாநில அரசு வழங்கிய பல்வேறு  ஊக்குவிப்புகளை அவர் விளக்கினார். மலேசியாவின்  நிறுவனப் பதிவு  இலாக்காவிடமிருந்து கம்பெனி  பதிவும்,  வளாகமும்  இல்லாமல் விண்ணப்பிக்கக்கூடிய பெண் தொழில் முனைவோருக்காக நாடி என்னும் கடன் திட்டம் விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. குறைந்தபட்சக் கடன் திட்டமான RM1,000  முதல் அதிகபட்சம் RM3,000  வரை  கடன் வசதி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆயிரம்  உணவு மற்றும் பானம் விற்பனையாளர்களுக்கு ஆன்லைனில் வர்த்தகம் செய்ய உதவும் வகையில் சிலாங்கூர் இ-டப்பூர்  மற்றும் யாயசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) திட்டங்களைச் செயல்படுத்த விருக்கிறது என்றார் அவர்.

இதற்கு ரிங்கிட் 10 மில்லியன் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இயக்கச் செலவுகளை ஈடுகட்டவும், வணிகத்தை ஈ-காமர்ஸ் தளத்திற்கு மாற்றியமைக்கவும்  இந்த மைக்ரோ கிரெடிட் கடன் திட்டம் உதவும் என்றார் அவர்.

 

 


Pengarang :