ALAM SEKITAR & CUACAEVENTPBTSELANGOR

குற்றச்செயலை குறைக்க அடுக்குமாடி குடியிருப்பில் சி.சி.டி.வி- சிலாங்கூர் அரசுஉதவி  

கிள்ளான் மார்ச் 27: கண்காணிப்பு  கேமராக்களை (சி.சி.டி.வி) நிறுவுவதற்கு சிலாங்கூர் அரசு ரிங்கிட் 3 லட்சம் செலவிட்டுள்ளது.

வீடமைப்பு, நகர்புற நல்வாழ்வு மற்றும் தொழில் முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக ரோட்சியா இஸ்மாயில் , பரிவுமிக்க அரசாங்கத்தின் (ஐபிஆர்) செரியா திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட ரிங்கிட் 10.5 மில்லியன் நிதியின் ஒரு பகுதியாகும் இந்த ஒதுக்கீடு என்றார்.

“ஒவ்வொரு குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்பிற்கும் நாங்கள் தலா ரிங்கிட்10,000 ஒதுக்கீடு செய்துள்ளோம். அவை தேவை மற்றும் நிலைமைக்கு ஏற்ப வழங்கப்படுதாக அவர் கூறினார். “வழக்கமாக, பிரதான நுழைவாயில் மற்றும் லிஃப்டில் 12 முதல் 16 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவது இதில் அடங்கும்” என்று ரோட்சியா இஸ்மாயில்  கூறினார்.

இன்று இங்குள்ள பண்டார் புத்ராவின் பங்சாபுரி ஸ்ரீ ஆயுவில் உள்ள லாமன் ஹிஜாவில் ”ஸ்ட்ராத்தா உரிமம்” வழங்கும் (சிலாங்கூரில் பிக் & பே) திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கிய பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த ஆண்டு முதல் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் கூட்டு நிர்வாக அமைப்பு (ஜே.எம்.பி) மற்றும் நிர்வாகக் கழகம் (எம்.சி) ஆகியோரால் செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு புகாரின் விளைவாக  இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக ரோட்சியா இஸ்மாயில்  கூறினார். “சி.சி.டி.வி நிறுவ தகுதியான குடியிருப்புகள் சட்ட விரோத மற்றும் குற்ற பதிவுகளின் தரவுகள் அடிப்படையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது


Pengarang :