ECONOMYSELANGORYB ACTIVITIES

மோரிப் தொகுதியில் 200 ஏழைகளுக்கு உணவுப் பொருள்கள் விநியோகம்

மோரிப், ஏப் 4– மோரிப் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 200 வசதி குறைந்த (பி40) குடும்பங்களுக்கு தொகுதி சார்பில்  200 உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டன.

கோழி மற்றும் காய்கறிகளை உள்ளடக்கிய அந்த உணவுப் பொட்டலங்களை விநியோகிப்பதற்கு ஐயாயிரம் வெள்ளி செலவிடப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த உணவுப் பொருள்கள் யாவும் கிராம சமூக மேம்பாட்டு நிர்வாக மன்றத்தின் வாயிலாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்திடமிருந்து பெறப்பட்டதாக அவர் சொன்னார்.

நாங்கள் வழங்கிய இந்த உணவுப் பொருள்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கான உணவுத் தேவையை நிறைவு செய்யும் என நம்புகிறோம் என்றார் அவர்.

இங்குள்ள ஸ்ரீ ஜூக்ரா மண்டபத்தில் நடைபெற்ற உணவுப் பொருள் விநியோக நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார். கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சாபுவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

உதவி தேவைப்படும் தரப்பினருக்கு உதவுவதற்கு ஏதுவாக இத்தகைய திட்டங்களைத் தாங்கள் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளதாக மாநில சட்டமன்ற துணை சபாநாயகருமான  ஹஸ்னுள் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளுக்கும் தலா ஒரு லட்சம் வெள்ளியம் 22 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தலா ஐம்பதாயிரம் வெள்ளியும் கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வாயிலாக வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார்.


Pengarang :