ECONOMYYB ACTIVITIES

விவசாயத் திட்டத்தை மேற்கொள்ள ருக்குன் தெத்தாங்கா கிளப்பிற்கு 51,000 வெள்ளி மானியம்

பெட்டாலிங் ஜெயா, ஏப் 13- இங்குள்ள தாமான் மாயாவில் கைவிடப்பட்ட நிலத்தில் பயிர் செய்வதற்கு எஸ்.எஸ். 25 ருக்குன் தெத்தாங்கா கிளப்பிற்கு  51,000  வவெள்ளி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவியின் வழி 557.4 சதுர மீட்டர் பரப்பளவிலான அந்த நிலத்தில் பல்வேறு பயிர்களை நடுவதற்குரிய வாய்ப்பு அந்த கிளப்பிற்கு ஏற்படும் என்று பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

அதோடு மட்டுமின்றி, இந்நடவடிக்கையின் வாயிலாக அப்பகுதியின் பாதுகாப்பையும் கால்வாய்களில் சீரான நீரோட்டதையும் உறுதி செய்ய முடியும் என அவர் சொன்னார்.

அந்த பகுதியில் முன்பு ருக்குன் தெத்தாங்கா இயக்கத்தின் கேபின் இருந்தது. 2016ஆம் ஆண்டிற்குப் பின்னர் அந்த இடம் கைவிடப்பட்டதோடு புதர் மண்டியும் காணப்பட்டது. எனினும், கடந்த ஏழு மாத காலத்தில் சமூக விவசாயத் திட்டத்தின் மூலம் அப்பகுதி வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது என்றார் அவர்.

இந்த மானியத்தின் மூலம் அந்த கிளப் பொறுப்பாளர்கள் இந்த இடத்தை மேலும் சிறப்பான முறையில் மேம்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


Pengarang :