ECONOMYNATIONALPENDIDIKANSELANGOR

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பந்திங் அறிவியல் பள்ளிக்கு மந்திரி புசார் வருகை

கோல லங்காட், ஏப் 28– கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட பந்திங் அறிவியல் இடைநிலைப்பள்ளிக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி நேற்று வருகை புரிந்தார்.

அப்பள்யில் நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்திலும் கலந்து கொண்டார். மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின், கோல லங்காட் மாவட்ட அதிகாரி முகது ஜூஸ்னி ஹஷிம் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கு கொண்டனர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் அப்பள்ளியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களையும் மந்திரி புசார் வழங்கினார்.

அப்பள்ளியில் இதுவரை கோவிட்-19 நோய்த தொற்று கண்ட 92 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம்  அவர்  தெரிவித்தார்.

இப்பள்ளியில் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி மே 1ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Pengarang :