ECONOMYSELANGOR

நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் பரிந்துரைகள்- சிலாங்கூர் முன்வைக்கும்

ஷா ஆலம், ஏப் 29– கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமல் செய்யப்பட்டுள்ள நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் இணைக்கக்கூடிய சில பரிந்துரைகளை தேசிய பாதுகாப்பு மன்றத்திடம்  சிலாங்கூர் அரசு முன்வைக்கவுள்ளது.

கடந்த இரு தினங்களாக நான்கு இலக்கங்களாக அதிகரிப்பை கண்டு வரும் நோய்த் தொற்றின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இப்பரிந்துரைகள் முன்வைக்கப்படவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் விவாதிப்பதற்காக நாளை வெள்ளிக்கிழமை மாநில பாதுகாப்பு மன்றத்துடன் சந்திப்பு நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் இன்று இரண்டாவது நாளாக  கோவிட்-19 நோய்த்  தொற்றின் எண்ணிக்கை நான்கு இலக்கமாக பதிவாகியுள்ளது. சிலாங்கூர் முழுவதும் அமலில் உள்ள நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மறுஆய்வு செய்வது தொடர்பில் விவாதிப்பதற்காக  மாநில பாதுகாப்பு மன்றக் கூட்டத்தை நாளை கூட்டவிருக்கிறேன் என்றார் அவர்.

அந்த கூட்டத்தின் வாயிலாக  நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் சேர்க்க வேண்டிய பரிந்துரைகள்  தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் முன்வைக்கப்படும் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் இன்று அதிக எண்ணிக்கையில் அவாது 1,083 கோவிட்-19 இன்று பதிவு செய்தது. நேற்று இந்த எண்ணிக்கை 1,019ஆக இருந்தது.


Pengarang :